Breaking News

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் இருந்தால் கட்டணம் வசூல் செய்யக்கூடாது- கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு toll plaza queue of more than 100 meters

அட்மின் மீடியா
0

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது இதை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஒன்றிய அரசு வழிகாட்ட வேண்டும். சுங்கச்சாவடிகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறித்த வழக்கு விசாரணை ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் போது, ​​போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் தற்போது பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனால் சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது. ஆனாலும் சிலநேரங்களில் அங்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது ,இதனை எதிர்த்து  பாலக்காடு பகுதியை சேர்ந்த நிதின் ராமகிருஷ்ணன் என்பவர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணி வகுத்து நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது

அதில் சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்பட வேண்டும். இந்தக் கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம் என   தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது

நீதிமன்ற உத்தரவை பார்க்க:-

https://www.livelaw.in/pdf_upload/2154000045820231-464251.pdf

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback