Breaking News

டெல்லியில் சற்று முன் மெட்ரோ ரயிலின் பாலம் விபத்து என பரவும் வீடியோ ? எங்கு நடந்தது ? எப்போது நடந்தது? முழு விவரம் Varanasi flyover collapse

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டெல்லியில் சற்று முன் மெட்ரோ ரயிலின் பாலம் கட்டும் பணியில் ராட்சத சிமென்ட் தூண் விழுந்து விபத்து. பல கார்கள் சிக்கிக் கொண்டது. காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டெல்லியில் சற்று முன் மெட்ரோ ரயிலின் பாலம் கட்டும் பணியில் ராட்சத சிமென்ட் தூண் விழுந்து விபத்து. பல கார்கள் சிக்கிக் கொண்டது. காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் எங்கு நடந்தது

அதேபோல் எப்போது நடந்தது என தெரியாமல் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ வாரனாசியில் 2018 ம் ஆண்டு நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது 15.05.2018 அன்று இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. 

இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கினார்கள் இந்த விபத்தில் சுமார் 18 பேர் பலியானார்கள்

அந்த வீடியோவை சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போது டெல்லியில் நடந்தது சற்ரு முன் நடந்தது என பரப்பி வருகின்றார்கள்

முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=fo49hVnutYo

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback