ஈரோடு இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய ஆலிம் முழு விவரம் erode by election independent candidate
அட்மின் மீடியா
0
ஈரோடு இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய ஆலிம் முழு விவரம்
நான் சுயேட்சை வேட்பாளர் ஆலிம் மவ்லவி முஹம்மது ஹபீழ் தாவூதி இது பற்றி கூறுகையில்
நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் வெற்றி வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிடும் மவ்லவி முஹம்மது ஹபீழ் தாவூதி ஆகிய நான் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறேன்..
என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால்...
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி,வடிகால் வசதிகளை பூர்த்தி செய்திடவும்,சுகாதாரம் மேம்படவும் களமாடுவேன்..
ஈரோடு சார்ந்த தொழில் வளங்களை மேம்படுத்துவேன்..
பூரண மதுவிலக்கு அமல்படுத்த போராடுவேன்...
அரசு மற்றும் தனியார் துறைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க பரிந்துரைப்பேன்..
சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்..
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பேன்..
மாநில உரிமைக்காக முன்னணியில் களமாடுவேன்..
மேலும், ஈரோடு வாழ் அனைத்து சமய, சமூக, மொழி, இன, ஜாதி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறும் வகையில் நடந்து கொள்வேன்.
அனைத்து சமய வழிபாட்டு தலங்களின் உரிமைகளையும் முழுமையாக பாதுகாத்திட உறுதியோடு பாடுபடுவேன்..
*நான் உங்களில் ஒருவனாக இருப்பதால் கடைநிலை மக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்திட என்னை இலகுவாக அணுகலாம்...
தேர்தலில் வாக்களிப்பது நம் அனைவரின் கடமை.
எனவே, நல்ல வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்யுங்கள்..
அதே போல சமூக மக்களுக்கு சேவை செய்திட விரும்புகிற இளைஞர்கள் நம் நாட்டின் சூழ்நிலை கருதி, அரசியலுக்கு வர ஆர்வம் கொள்ள வேண்டும்..
அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றுவேன் என்று மக்கள் மன்றத்தில் உறுதி அளிக்கிறேன்..
இப்படிக்கு
என்றும் சமூக பணியில்...
முஹம்மது ஹபீழ் தாவூதி, ஈரோடு.
Tags: அரசியல் செய்திகள்