தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அங்கி அணிவது கட்டாயமில்லை- உயர்நீதிமன்றம்
தேசிய கம்பெனி சட்ட வாரிய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என கடந்த 2017 நவம்பர் 14ம் தேதி தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, தேசிய கம்பெனி சட்ட விதிகளில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது எனவும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோல் விதிகள் வகுக்க உயர் நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள் வாரிய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
https://www.livelaw.in/pdf_upload/rajesh-v-union-of-india-1-457876.pdf
Tags: தமிழக செய்திகள்