Breaking News

கணவரை விவாகரத்து செய்ய இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் Shariat Council khula is not valid madras high court

அட்மின் மீடியா
0

கணவரை விவாகரத்து செய்ய இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு



குலா நடைமுறை என்றால் என்ன:-

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் ஜமாத் தலைவரிடம் முறையிட வேண்டும். கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் அப்பெண்ணைத் திரும்பக் கொடுக்குமாறு கூறுவார்

அந்த மகர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிடப்படும். மகர் தொகையை கணவனுக்கு திருப்பி கொடுத்த பிறகே அப்பெண்ணுக்கு திருமண முறிவு உத்தரவு கிடைக்கும். 

குலா செய்தது தவறு எனப் பின்னர் அறிந்த பெண், மீண்டும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால், அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் மனைவியரை விவாகரத்து செய்ய பின்பற்றப்பட்ட தலாக் நடைமுறையைப் போல, கணவரை விவாகரத்து செய்ய மனைவியருக்கு குலா என்ற நடைமுறை ஷரியத் சட்டத்தில் உள்ளது.


வழக்கு :-

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தன்னை விவாகரத்து செய்து மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் ஷரியத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு என்றும், பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் நீதிமன்றங்கள் அல்ல என்றும், அந்த அமைப்புகள் விவாகரத்து வழங்கி சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி, ஷரியத் கவுன்சில் மனைவிக்கு வழங்கிய குலா சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யும் உரிமையை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி பெற வேண்டும் எனவும், ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்பின் மூல. பெற முடியாது என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் இரு தரப்பினரும் தங்கள் பிரச்னைக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவையோ அல்லது குடும்ப நல நீதிமன்றத்தையோ நாடி தீர்வு காணும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


வழக்கின் விவரங்களுக்கு:-

https://www.livelaw.in/news-updates/madras-high-court-shariat-council-not-courts-or-arbitrators-cannot-dissolve-marriage-by-khula-220259

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு:-

https://www.livelaw.in/pdf_upload/mohammed-rafi-v-state-of-tamil-nadu-456357.pdf

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback