Breaking News

அரசு பணிக்கு இனி தமிழ் அவசியம்..!சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் govt jobs tamil mandatory

அட்மின் மீடியா
0

தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று சட்டமன்றத்தில் நிறைவேறியது.

தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் அமர முடியாது என்ற சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback