Breaking News

வாட்ஸப்பில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்.. முழு விவரம்...chennai metro rail ticket whatsapp

அட்மின் மீடியா
0

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலமே டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அமல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரே ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது 

சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரையிலும், 

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளதால் சென்னை ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Metro Rail to Offer WhatsApp e-Tickets

Chennai Metro To Introduce WhatsApp Ticket Facility


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback