BREAKING NEWS ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் போட்டி.
அட்மின் மீடியா
0
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் போட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரணும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார்.
இதனால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்து மறைந்த திருமகன் ஈ.வெ.ரா-வின் தந்தை ஆவார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவராகவும் பதவி வகித்தவர். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்த தனது மகன் திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டு வென்ற தொகுதியில், வேட்பாளராக போட்டியிடுகிறார்.
Tags: அரசியல் செய்திகள்