Breaking News

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை: சத்ய பிரதா சாகு தகவல்

அட்மின் மீடியா
0

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.



சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.போலி அட்டைகள் தயாரிக்க முடியாதபடி புதிய வாக்காளர் அட்டை  வழங்குவது குறித்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது என்றும் இந்தாண்டும் புதிதாக வாக்காளர் அட்டைக்கும், மாற்றங்களுக்காகவும் விண்ணப்பித்தவர்கள் என்று 16 லட்சம் பேர் உள்ளனர்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும். பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback