Breaking News

வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க உள்ளே சென்ற நபர் அடுத்து நடந்தது என்ன .. ரூ.6000 அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றான வந்தே பாரத் ரயில் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகிறது என்பதை தெரிந்ததே.இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வந்த போது அதனுள் ஏறி செல்பி எடுக்க உள்ளே சென்றார்

அவர் செல்ஃபி எடுத்துவிட்டு கீழே இறங்க முயன்றபோது ரயிலின் தாணியங்கி கதவுககள் மூடிக்கொண்டது இதனால் பதறிய அந்த நபர் கதவை திறக்க முயன்றார். ஆனால், அவரால் திறக்கமுடியவில்லை.

அதன்பின்பு அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தான் ரயிலில் பயணிக்க வரவில்லை என்றும், செல்ஃபி எடுக்க தான் ரயிலில் ஏறினேன் என்று கூறிவிட்டு , கதவை திறக்க கூறி உள்ளார். அதற்கு டிக்கெட் பரிசோதகர் இந்த ரயிலில் இருக்கும் கதவுகள் தானியங்கி கதவுகள் எனவே நாம் யாரும் அதனை திறக்க முடியாது.ஒவ்வொரு ரயில் நிலையம் வரும்போது அந்த தானியங்கி கதவுகள் தானாகவே திறந்து விடும் அதன்பிறகு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக் கொள்ளும் என்று அந்த நபருக்கு எடுத்து விவரத்தை கூறியுள்ளார். 

மேலும் அந்த நபர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியதால்  வேறு வழியின்றி அவர் அடுத்த ரயில் நிலையம் ஆன விஜயவாடா வரை பயணம் செய்தார் கிட்டத்தட்ட 190 கி.மீ பயணம் செய்தார்.மேலும் டிக்கெட் எடுக்காமல் அந்த நபர் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ததால் அபராதமாக 6,000 விதிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/BSundaravadiva1/status/1615663924405321729

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback