Breaking News

4300 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி எகிப்த்தில் கண்டுபிடிப்பு! 4300 year old mummy found

அட்மின் மீடியா
0

4300 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி எகிப்த்தில் கண்டுபிடிப்பு!4300 year old mummy found



எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே உள்ள சக்காராவில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஓர் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது சுமார் 4300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் எனவும் அந்த மம்மி எகிப்தின் அரசின் காலவராக இருந்த மனிதனின் மம்மியாக இருக்கும் எனவும் அந்த மம்மி தங்க முலாம் பூசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் எகிப்து நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் இந்த மம்மி மிகப் பழமையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

மேலும் இந்த மம்மி 15 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் ஒரு பெரிய செவ்வக சுண்ணாம்பு கல்லால் செய்யப்பட்ட பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

சுமார் 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் காணப்படும் இந்த மம்மியின் பெயர் ஹெகாஷெப்ஸ் என்பதாகும். 

 4,300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஹெகாஷெப்ஸ்-சின் உடல் தங்க இலையில் போர்த்தப்பட்டு பூ வேலைப்பாடுகள் ஆன கல்லாலான சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. அது சிதைவுறாமல் அப்படியே இருந்துள்ளது. 

4300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் அரசின் காலவராக இருந்த மனிதனின் மம்மி தங்க முலாம் பூசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் மம்மி நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பழமையானதாக இருக்கலாம் என அறியப்படுகின்றது

அதேபோல் இந்தக் கல்லறைகளுக்குள் வெறும் மம்மிக்கள் மட்டும் இருக்கவில்லை. அந்தக் காலத்தைய மட்பாண்டங்களும், சிலைகளும் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 10 மீட்டர் ஆழமுள்ள மற்றோரு பகுதியில் அழகான மரச் சிலைகள், மூன்று கல் சிலைகள், ஒரு மேசை,  பல தாயத்துக்கள், கல் பாத்திரங்கள், அன்றாட வாழ்க்கைக்கான கருவிகள் மற்றும் சிலைகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=XOmf4d3u32M

https://www.youtube.com/watch?v=4cKcpwPy3Uo

Egypt unveils 4300 year old mummy

4,300 year old Egyptian mummy wrapped in gold

Archeologists discover 4300 yearmold Egyptian mummy

Give Us Your Feedback