20 கோடி கொடுத்து ஒரே ஒரு நாய் வாங்கிய பெங்களூர் தொழிலதிபர்.. வைரலல் வீடியோ 20 crore dog
பெங்களூரை சேர்ந்த பிரபல நாய் வளர்ப்பு நிறுவன கடபோம்ஸ் கென்னல் உரிமையாளர் சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத் தலைவராக உள்ளாவர் இவர் 20 கோடி கோடி கொடுத்து காகேசியன் ஷெப்பர்ட் இன நாயை வாங்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள விற்பனையாளரிடமிருந்து ஒன்றரை வயதுடைய காகேசியன் ஷெப்பர்ட் இன நாயை வாங்கி இருக்கிறார். இந்த நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்று பெயரிட்டுள்ளார்.
நாயின் சிறப்புகள்:-
காகசியன் ஷெப்பர்ட் என்பது காகசஸ் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில், குறிப்பாக ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஒசேஷியா, சர்க்காசியா, துருக்கி, ரஷ்யா மற்றும் தாகெஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாவலர் நாய் ஆகும்.
இந்தியாவில் இந்த வகை நாய் மிகவும் அரியவகை இனமாகும்.
5 அடி உயரம் வரை வளரக்கூடியவை
நாயின் எடை 45 முதல் 77 கிலோ வரை இருக்கும்.
ஆயுட்காலம் 10 ஆண்டு முதல் 12 ஆண்டுகள்
இந்த நாய் தான் உலகிலேயே மிகப்பெரிய நாய் இனங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
நாயின் வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்