Breaking News

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் சீரமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு tamilnadu subsidy masjid

அட்மின் மீடியா
0

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பிற்காக தமிழக அரசு ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு 

 தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை புணரமைப்பிற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.6 கோடி மானியம் அளித்ததை தொடர்ந்து வக்பு நிறுவனங்கள் இதன் மூலம் 77 பயனடைந்துள்ளது. 

 

தமிழகத்திலுள்ள பல்வேறு வக்பு நிறுவனங்கள் புணரமைப்பிற்காக போதிய நிதியின்றி உள்ளதை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (13.01.2023) சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பிற்கான வழங்கப்படும் மானியத் தொகையினை ரூ.10 கோடியாக உயர்த்தி அறிவித்தார். இந்த மானியத் தொகையின் வாயிலாக இந்த ஆண்டு அதிக வக்பு நிறுவனங்கள் பயன் பெறும்.

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பு மானியத்தொகையினை உயர்த்தி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு அமைச்சர் அவர்களுக்கும் தமிழ் நாடு வக்பு வாரியம் சார்பாக மாண்புமிகு வாரியத் தலைவர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback