Breaking News

1 வருடத்திற்க்கு சென்னை மாம்பலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது


இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்

மாம்பலம் பிரதான சாலை (கோடம்பாக்கம் மெட்ரோ ஸ்டேசன்) CHENNAI METRO RAIL LIMITED ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 25.12.2022 முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால், CHENNAI METRO RAIL LIMITED கோரியடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் 09.01.2023 முதல் 07.04.2024 வரை மேலும் பதினைந்து மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது.

மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு. மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு. ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback