Breaking News

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு! PIL seeks Madras HC to stop linking Aadhaar with Tneb number

அட்மின் மீடியா
0
மின் இணைப்பு எண்ணுடன்  வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு உள்ளவர்கள் அவர்களது ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும் என்று  தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது, மேலும் ஆதார் இணைக்க  மின் அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கவும் தமிழக மின் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது
 
 
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க சொல்வதை தடை செய்ய வேண்டும்.  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback