ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை..! no senior citizen rail ticket concession
முதியோருக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை, 2020ல் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் வழங்கும் திட்டம் தற்போது இல்லை என, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்
பொதுவாக நாட்டின் மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது இந்த வசதியை 2020 மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வே ஒத்திவைத்தது. அதன் பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது கடந்த 2 ஆண்டுகளாக இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் கூடுதலாக செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்