Breaking News

ஆர்டிஓ அலுவலகம் செல்லவேண்டாம் - ஆன்லைனில் LLR விண்ணப்பிப்பது எப்படி apply llr online tamilnadu

அட்மின் மீடியா
0

 டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படிதான் எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் ஆகும்


எல்எல்ஆர் பெற நீங்கள் எங்கும் அலைய வேண்டாம் ஆன்லைனில் நீங்களே ஈசியாக அப்ளை செய்யலாம், அப்ளை செய்ய உங்கள் ஆதார் கார்டு மட்டும் போதும் வேறு ஏதுவும் தேவையில்லை

மேலும் தற்போது ஆன்லைனில் கீழ் உள்ள 18 வகையாக அலுகைகளை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

1.பழகுநர் உரிமம்(எல்எல்ஆர்)

2. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு(வாகனத்தை இயக்கிக்காட்டுதல் தேவையில்லை என்றால்)

3. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்

4. ஓட்டுநர் உரிமம், ஆர்சிபுக்கில் முகவரி மாற்றுதல்

5. சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி

6. வாகன உரிமத்தை ஒப்படைத்தல்

7. வாகனத்துக்குத் தற்காலிகமாகப் பதிவெண் பெற விண்ணப்பித்தல்

8. முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்கு பதிவெண் பெற விண்ணப்பித்தல்

9. வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல்

10. என்ஓசி சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்

11. வாகனத்தின் உரிமையாளரை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல்

12. வாகன ஆர்சி புத்தகத்தில் முகவரியை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்

13. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்தல்

14. உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்

15. வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல்

16. வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல்

17. வாகனத்தின் உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்

18. தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெற விண்ணப்பித்தல்

என அனைத்து வகைக்கும் ஆனலைனில் விண்ணப்பிக்கலாம்

நீங்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் முதலில் பயிற்சி உரிமம்  வழங்கப்பட்டும். அதை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சி முடிந்ததும். 30 நாட்களுக்கு பின்னர் போக்குவரத்துத் துறை அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டி காண்பிக்க வேண்டும். அதில் பாஸ் ஆனால் லைசென்ஸ் வழங்கப்படும்.

ஆன்லைனில் LLR விண்ணப்பிப்பது பெறுவது எப்படி

முதலில் மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு செல்லுங்கள் https://parivahan.gov.in/parivahan/

அடுத்து அதில் டிரைவிங் லைசன்ஸ் ரிலேட்டட் என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில் தமிழ்நாடு என்பதை செலக்ட் செய்து கொள்ளவும் 

முதல் படி:-

அதன்பின்பு வரும் பக்கத்தில்  LLR  என்பதை கிளிக் செய்யவும் 

அடுத்து வரும் பக்கத்தில் ஜெனரல் என்பதை கிளிக் செய்து சப்மிட் கொடுக்கவும் 

அதன் பின்பு உங்கள் ஆதார் நம்பரை பதிவு செய்து otp கிளிக் செய்தவுடன் உங்கள் மொபைல் ஃபோனுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

இரண்டாம் படி:-

அடுத்து அதில் உங்கள் ஆதார் விவரங்கள் உங்கள் பெயர் மற்றும் உங்கள் புகைப்படம் உங்கள் முகவரி என அனைத்து விவரங்களும் அதில்  காண்பிக்கப்படும் அனைத்து விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள்

அடுத்தது  அதில் உங்களுடைய மொபைல் நம்பர் மெயில் ஐடி மற்றும் அங்க அடையாளங்கள் ஏதேனும் இரண்டு, பிளட் குரூப் ஆகியவற்றை பதிவிடுங்கள்

அடுத்து  அதன் கீழ் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்பதை பதிவிடுங்கள்

அதன் பின்பு உங்களுக்கு எந்த வகையான லைசன்ஸ் தேவை கியர் உள்ள வண்டி அல்லது கியர் இல்லாத வண்டி எது தேவையோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அதன் அதன் பின்பு அதற்கு கீழ் உள்ள உங்கள் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்புகிறேன் என்பதை  ஓகே கொடுத்துவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அதன் பின்பு உங்கள் மொபைல் போனுக்கு உங்களுடைய விண்ணப எண் மற்றும் பாஸ்வேர்ட் ஆகிய வந்துவிடும்

மூன்றாம் படி:-

அடுத்து மீண்டும் முகப்பு பக்கத்திற்கு மீண்டும் சென்று அதில் உள்ள கம்ப்ளீட் யுவர் பெண்டிங் அப்ளிகேஷன் என்பதை கிளிக் செய்யவும் 

அதன்பின்பு வரும் பக்கத்தில் உங்களுடைய அப்ளிகேஷன் நம்பர் கொடுத்து ஓகே கொடுக்கவும்

அதன் பின்பு எல்எல்ஆர் கட்டணமாக ரூபாய் 230 நீங்கள் ஆன்லைனில் செலுத்தி விடவும் 

மீண்டும் முகப்பு பக்கம் சென்று tutorial for LL test என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் விண்ணப்ப எண் கொடுத்தவுடன் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும் 

அடுத்து ஓர் வீடியோ உங்களுக்கு மொபைலில்  தோன்றும் அந்த வீடியோ சுமார் 30 நிமிடங்கள் நீங்கள் எந்தவித ஸ்கிப்பும் செய்யாமல் அதை முழுமையாக பார்க்க வேண்டும்.

அடுத்து மீண்டும் முகப்பு சென்று அதில்  ஆன்லைன் எல் எல் டெஸ்ட் online LL test என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு 10 கேள்வி பதில் கேட்கப்படும் அதனை சரியாக கிளிக் செய்தவுடன் உங்கள் எல் எல் ஆர் தயார் என உங்கள் மொபைல் போனுக்கு மெசஜ் வரும்

அடுத்து முகப்பு பக்கம் சென்று எல் எல் ஆர் பிரிண்ட் என்பதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம் அவ்வளவுதான்

30 நாட்கள் கழித்து லைசன்ஸ் விண்ணப்பித்து கொள்ளலாம்


எல் .எல்.ஆர் விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள

https://www.youtube.com/watch?v=IHj1imD9J3s

how to apply llr online in tamil

llr apply online tamilnadu

llr download tamilnadu

how to download llr copy in online tn

llr apply online tamilnadu parivahan

how to download llr copy in online tn

llr renewal online tamilnadu

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback