ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் himachal pradesh election 2022
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது . தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி என்று மும்முனை போட்டி இருந்ததால் இங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்நிலையில் தனியார் தொலைகாட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தது
2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 44 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் 21 இடங்களில் வென்றிருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68
தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி கட்டாயமாகும். ம்தியம் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால்
இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைக்க
வாய்ப்புள்ளது.
கருத்துகணிப்பு முடிவுகளை பொய்யாக்கிய இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் ஹிமாச்சல் தேர்தல் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்ந்து வருகிறது. இருப்பினும் இந்த முறை பாஜக 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகிய நிலையில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. .
02.00 மணி நிலவரப்படி:-
2022 சட்ட மன்ற தேர்தல் முன்னனி நிலவரம்
பாஜக:- 25 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ்:- 40 இடங்களில் முன்னிலை
ஆம் ஆத்மி:- 00
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்