Breaking News

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தமிழக அரசு திட்டம்..உடனே உங்க ரேஷன் கடைக்கு போங்க உங்க வங்கி கணக்கு இணைத்துள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள் govt pongal prize

அட்மின் மீடியா
0

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்த பரிசு பொருள் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்களில் ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்து, வங்கி கணக்கு இல்லாதோர் விவரம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டம்தோறும், வங்கி கணக்கு இல்லாத கார்டு தாரர்களுக்கு, கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு துவங்கும் பணிகள் துவங்கியுள்ளன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் எனவே, கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி விவரங்களை பெற்று பதிவு செய்யவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback