பாட்டியின் கம்மலை பறித்த திருடர்களுடன் துணிச்சலுடன் போராடிய சிங்கப்பெண்…. வைரல் வீடியோ….!! Girl fight off earrings snatchers in Meerut
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார் அவரது பாட்டி சந்தோஷி
அப்போது அங்கு பைக்கில் 2 திருடர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் செல்லும்போது பேத்தி ரியா அந்த திருடர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டு அவர்களிடம் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து அந்த திருடர்கள் ரியாவை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.
ரியா மர்ம நபர்களுடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. . இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி 6 மணி நேரத்தில் குற்றவாளைகளை கைது செய்தனர்.
வீடியோ பார்க்க
Tags: இந்திய செய்திகள்