சவூதியில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வியாழக்கிழமை வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜித்தா சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது, மேலும் இது கடுமையான மழையாக பெய்ய வாய்ப்புள்ள காரணத்தால் மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம்... மேலும் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் சற்று பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்த்து கொள்ளுங்கள்.
Tags: வெளிநாட்டு செய்திகள்