ஆவின் வெண்ணெய் விலை உயர்வு aavin butter price incrcese
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் கேக்வகைகள் விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று ஆவின் நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து தற்போது 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் பிரீமியம் நெய் 630 ரூபாயிலிருந்து 680 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியது
இந்நிலையில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலை இன்று முதல் உயர்வு ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
500 கிராம் வெண்ணை ₹250ல் இருந்து ₹260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
100 கிராம் ₨52ல் இருந்து ₨55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்