Breaking News

யூடிபில் ஆபாச விளம்பரங்களால் தேர்வில் தோல்வி 75 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த இளைஞர் ! அபராதம் விதித்த நீதிபதிகள் Failed Exam Blamed YouTube Ads

அட்மின் மீடியா
0

யூடிபில் ஆபாச விளம்பரங்களால் தேர்வில் தோல்வி 75 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த இளைஞர் ! அபராதம் விதித்த நீதிபதிகள் Failed Exam Blamed YouTube Ads


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், மத்திய பிரதேச காவல்துறையின் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், ஆனால் இது தொடர்பான வீடியோக்களை யூடிபில் பார்க்க போனால் இடையே அதிக விளம்பரங்கள் வருவதாகவும் மேலும், "இந்த விளம்பரங்கள் சாதாரண விளம்பரங்கள் அல்ல, இவைகள் ஆபாச விளம்பரங்களாக இருக்கின்றன. எனவே இதானல் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி எனது தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் தனது கவனத்தை இழந்து மத்திய பிரதேச காவல்துறை தேர்வில் தன்னால் தேர்ச்சியடைய முடியவில்லை.நான் தேர்வில் தோற்றதற்கு யூடியூபில் தலைகாட்டிய பாலியல் விளம்பரங்களே காரணம். எனவே, அதனால் தனக்கு கூகுள் நிறுவனம்  75 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ஆபாச விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 

இந்த மனு அரசியல் அமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மிக கொடூரமான மனுக்களில் ஒன்று. மட்டுமல்லாது இது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கவே தாக்கல் செய்யப்பட்டிருகிறது.

யூடியூப்பில் எத்தகைய விளம்பரங்கள், விடியோக்கள் தெரிய வேண்டும் என்பதை பயனரே தேர்வு செய்துகொள்ள முடியும். அப்படியிருக்க ரூ.75 லட்சம் இழப்பீடு கோரியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து நீதிபதிகள் மனுதாரரை கடுமையாக கண்டித்தனர்.

மேலும் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு யூடியூப் காரணம் என தெரிவித்துள்ள மனுதாரர் தேர்வின்போது எதற்காக யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார் 

உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லையெனில் விட்டு விடுங்கள். மீண்டும் அதை நோக்கியே ஏன் போகிறீர்கள்?என்று கேள்வியெழுப்பினர். 

இது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கவே தாக்கல் செய்யப்பட்டிருகிறது. இனி இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். எனவே மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை அபராதமாக விதிக்கிறோம்" என்று கூறி உத்தரவிட்டனர். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத மனுதாரர் இந்தியில் நீதிபதிகளிடம் தனக்கு வேலை இல்லை என்றும் எனது பெற்றோர்கள் தினக்கூலிகள் எனவும் இதனால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது எனவும் ஆகவே அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியதையடுத்து அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக நீதிபதிகள் குறைத்து தீர்ப்பளித்தார்கள்


வழக்கின் மேலும் விவரங்களுக்கு:-

https://www.livelaw.in/top-stories/obscene-youtube-ads-distracted-failed-in-exams-says-petitioner-seeking-compensation-supreme-court-dismisses-plea-with-costs-216237?infinitescroll=1

Man complains he failed exam due to YouTube advertisements

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback