சீனாவில் பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு கண்டுபிடிப்பு omicron tamil
சீனாவில் பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு கண்டுபிடிப்பு
சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா வைரஸ்சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.இதனால், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.இதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது மேலும் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து
இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் பி.எப்.7 இந்தியாவில் குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பி.எப்.7 புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினார்.
மேலும் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பு மற்றும் தொற்றை கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்கவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் அரசு பரிந்துரைக்கப்பட்டது
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில்,
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னமும் இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் நாடு முழுவதும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும்
என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
omicron bf 7 tamil
omicron bf.7 in india
Tags: கொரானா செய்திகள்