Breaking News

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு முழு விவரம் malaysia landslide

அட்மின் மீடியா
0

 

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள படாங் கலி என்ற சுற்றுலா பொழுதுபோக்கு இடம் உள்ளது,இது மலேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதியாகும்.


 

இன்று அங்கிருந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவு, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து முகாமிட்டிருக்கும் இடம் வரை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கெந்திங் மலையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவு பகுதிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் சுமார் 79 பேர் அங்கு இருந்திருக்கலாம் எனவும் இவர்கள் கடந்த புதன்கிழமை அப்பகுதிக்குச் சென்றதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா கூறினார்.

மேலும் இதுவரை  60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், 25பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 400 மீட்புப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் ஹில் ரிசார்ட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு இயற்கை பண்ணையில் இந்த சுற்றுலா முகாம் அமைந்துள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/andychester_/status/1603619883769417728

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback