சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு என பரவும் செய்தி பொய்யானது யாரும் நமபவேண்டாம் saudi football team rolls royce car fake
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அர்ஜென்டினாவை லீக் சுற்றில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார் எனவும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.9 கோடி முதல் 10.50 கோடி வரை உள்ளது. இந்த அறிவிப்பால் சவுதி அரேபிய வீரர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் என பல ஊடகங்களில் செய்தி வலம் வந்தது
இந்த நிலையில் சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் உங்களுக்கு எந்த கலரில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வேண்டும் என்று கேட்டபோது ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலே பொய்யானது என்று கூறினார்.
மேலும், எங்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், சிறந்ததைச் செய்யவுமே நாங்கள் இங்கு வந்துள்ளோம், அதுவே எங்களின் மிகப்பெரிய சாதனை என அவர் பதிலளித்தார்
சவூதிக்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையே இன்று கத்தாரில் நடைபெற்ற போட்டியில் சவூதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது, இந்த வெற்றியை கொடாடும் விதமாக நவம்பர் 23 ம் தேதி சவூதி அரேபியாவில் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதிலிருந்து அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவல் பொய்யானது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யவேண்டாம்
சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி பதிலை காண
Tags: FACT CHECK வெளிநாட்டு செய்திகள்