Breaking News

இனி சிலிண்டரில் QR கோடு வெல்டிங் செய்யப்படும் எதற்க்கு தெரியுமா

அட்மின் மீடியா
0

கேஸ் சிலிண்டர்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக QR Code வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

 


இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்

 

உலக எல்பிஜி வாரம் 2022 World LPG Week 2022 நவம்பர் 14 முதல் 18ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் தொடர்பான பொருட்காட்சியில் சிலிண்டர்களில் QR Code ஒட்டப்படும் முறை அறிமுகபடுத்தியுள்ளார் இதனால், கேஸ் சிலிண்டர்களை எளிதாக ட்ராக் (Track) செய்யமுடியும்.இதனால், சிலிண்டர்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதோடு சிலிண்டர் திருட்டு மற்றும் தவறான பயன்பாடுகளையும் கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பயன்பாட்டில் உள்ள சிலிண்டர்களில் QR Code ஒட்டப்படும். இனி உற்பத்தியாகும் புதிய கேஸ் சிலிண்டர்களில் QR Code வெல்டிங் செய்யப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback