Breaking News

ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு Metropolitan Transport Corporation

அட்மின் மீடியா
0

ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவுஅனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கி செல்ல வலியுறுத்தல்

                                                  


இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:-

கால அட்டவணைப்படி ‘நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் /சாலைகளில் பேருந்துகளை இயக்க கூடாது.

அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினைநிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கிசெல்லுதல் வேண்டும்.

மா.போ.கழக பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி /இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

மா.போ.கழகத்தில், சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும். குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக்கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். மாறாக பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback