Breaking News

FACT CHECK Movies Junction ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ் அப் குருப் என பரவும் செய்தி உண்மை என்ன Movies Junction fake news

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முக்கிய செய்தி அனைவர்க்கும் தெரியப்படுத்தவும்... Whatsapp குரூப் உள்ளது.... அது IS தீவிரவாத குரூப்... உங்களுக்கு join Movies Junction என்ற பெயரில் ஒரு அழைப்பு வந்தாலும் சேர வேண்டாம்... மீறி சேர்ந்தால் அதிலிருந்து exit ஆகி வெளியே செல்ல முடியாது... So மிகவும் கவனம்... மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்... உங்கள் சொந்தபந்தங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை ஆராய்ந்தது, 

மேலும் அது போல் ஏதேனும் ஒரு வாட்ஸ் குருப் ஓர் செய்தி வெளியாகி உள்ளதா எனவும் இணையத்தில் தேடினோம்

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த 2017 ம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வரும் பொய் செய்தி என்பதை நம்  உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

கடந்த 2017 ம் ஆண்டு check4spam.com என்ற இனையதளம் அந்த செய்தி பொய்யானது என பதிவிட்டுள்ளது

மேலும் அந்த செய்தியில்  வாட்ஸ்ஆப் குழுவில் சேர்ந்தால், வெளியேற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் வாட்ஸ்அப்பில் அப்படி எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.

நாம் எந்த ஒரு குழுவிலும் லின்ங் வழியாக இணையலாம் வேண்டாம் என்றால் வெளியேறும் வசதியும் உள்ளது எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்

முடிவு:-


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Movies JunctionWHATSAPP

Movies Junction fake news

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback