கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இனிமேல் சிறப்பு தரிசனம் என்னும் நடவடிக்கை படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், சீராய்வுக் கூட்டம் நடந்தது.அதன் பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது,
கோவிலில் சிறப்பு தரிசனம் பெரும் நடைமுறை திமுக ஆட்சி கொண்டுவரவில்லை. மேலும் இதை தடுப்பதற்கு மனிதவள துறை நடவடிக்கை எடுத்து வருகிறது”, என்றார்.
நாமக்கல்லில் உள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோவிலில் வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சிறப்பு தரிசனத்தின் மூலமாக கிடைக்கிறது. இருப்பினும், சிறப்பு தரிசனமாக தலா ரூ.20 வழங்கி வரும் வழக்கத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ளது
மேலும், கோவிலுக்கு வரக்கூடிய மற்ற வருமானங்களைக் கொண்டு நிர்வகிக்கலாம் என்று கூறினோம். வரும் நாட்களில், சிறப்பு தரிசனம் எங்கு நடந்தாலும், அவற்றைத் தடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுப்போம், என்று அமைச்சர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்