Breaking News

இனி அனைத்திற்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா முழு விபரம் . Birth certificates to be made mandatory

அட்மின் மீடியா
0

 அரசு வேலை, லைசன்ஸ், பாஸ்போர்ட், பள்ளிகளில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம். எனவும் இதற்காக பிரத்யேகமாக  பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது



தற்போது அரசு பணிகள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் இல்லை  இந்நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என அனைத்திற்கும் இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் வகையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எதிர் வரும் இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 வேலை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். 

இந்த கூட்டத்தொடரில்  மத்திய அரசு  பல்வேறு மசோதாக்களை  நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ல் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மத்திய ,மாநில அரசுப் பணி,ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்படும் என திருத்தம் செய்யப்படும் என தெரிகின்றது

இதன்மூலம் ஒருவருக்கு 18 வயதாகும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை தானாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதே நபர் இறந்துவிட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து முறையில் எளிதாக நீக்க முடியும். 

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் குடியுரிமைக்கான சட்டப்பூர்வமான அத்தாட்சியாகும். பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டம் 1969-ம் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் அதற்கான விவரங்களைப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback