Breaking News

மலேஷியாவில் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமனம்! anwar ibrahim malaysia prime minister

அட்மின் மீடியா
0

 

மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் அவர்கள் மலேஷிய மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரண்மனை தெரிவித்துள்ளது.

மலேசிய பாராளுமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி கலைக்கப்பட்டது. அதன்படி 222 இடங்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு 15-வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்தது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் ஆனால் இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கட்சி  83 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. 

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்மாயில் சாப்ரி யாகூப் தலைமையிலான கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

மலேசியாவில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112 இடங்களைப் பெற்ற நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் அல்லது எந்த கூட்டணியும் உருவாகவில்லை. எனவே, மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமனம் செய்து அறிவித்துள்ளார்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback