Breaking News

சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி நடத்திய கும்பல் கைது

அட்மின் மீடியா
0

சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், விருத்தாச்சலம், நாமக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் போலி வங்கி நடத்திய கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளார்கள் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்



இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:-

ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் ரிசர்வ் வங்கியிடம் முறையான லைசன்ஸ் பெறாமல் போலியான வங்கி நடப்பதாக வந்த தகவலை அடுத்து மேற்கொண்ட விசாரனையில் 

இந்த போலியான வங்கி கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டுள்ளது, மேலும் இந்த வங்கியில் 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்துள்ளார்கள் ,இந்த போலியான வங்கியில்  தினசரி 70 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்துள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு கள்ளக்குறிச்சி, சேலம், விருத்தாச்சலம், நாமக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம். 56 லட்சம் ரூபாய் பணத்தை முடக்கி உள்ளோம். இது தொடர்பாக இதுவரை 46 பேரை கைது செய்துள்ளோம். மேற்கொண்டு தொடர் விசாரணை நடந்து வருகின்றது என அவர் கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback