Breaking News

டிச.5ல் மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு tamilnadu weather update

அட்மின் மீடியா
0

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:-

அந்தமான் கடல் பகுதிகளில் ஐந்தாம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.12.2022: தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பு

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback