Breaking News

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ம்தேதி வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 18-ஆம் தேதி காற்றழுத்த வலு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில்:-

இன்று தெற்க்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்ரும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடற்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்க்கு வட மேற்க்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்ககடல் பகுதிகளில் நவம்பர் 18-ஆம் ம்தேதி வலுவடைய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக நவ. 19ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது

இந்நிலையில் இதனால் இன்று முதல் நவ. 18ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback