10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழக ஊர்காவல் படையில் பணி முழு விவரம்
சேலம் மாவட்டம் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
சேலம் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்
சேலம் மாவட்டம் ஊர்க்காவல் படையில் ஆத்தூர் மற்றும் சங்ககிரி படை பிரிவில் (ஆண்கள்- 52, பெண்கள்-3 ) 55 காலிப் பணியிடங்கள் நிரப்ப, தகுதியுள்ள நபர்கள் 26.11.2022 அன்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்விதகுதி:-
10ஆம் வகுப்பு,
வயது வரம்பு:-
18 வயது முதல் 50 வயதிற்குள்,
உடல் தகுதி:-
உயரம் ஆண்கள் 167 செ.மீ,
பெண்கள் 157 செ.மீ
மற்றும் நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எவ்வித குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது.
தேர்விற்கு ஆஜராகும்போது விண்ணப்பதாரர்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2,
கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு (அசல் மற்றும் நகல்கள்) கொண்டு வர வேண்டும்.
ஊர்க்காவல் படை பிரிவானது தன்னார்வ தொண்டு ஆகும். எனவே தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் பணிபுரிய அழைக்கப்படுவர்.
பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2,800 வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 94981 00970 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 96293 90203 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: வேலைவாய்ப்பு