தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள் செல்ல வேண்டும்? தெரியுமா.....TNSTC
மாதவரம் புதிய பேருந்து நிலையம் :
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள்.
கே.கே. நகர்பேருந்து நிலையம் :
ECR வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருத்து நிலையம் :
திண்டிவனம், விக்கிரவாண்டி. பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் ஈழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவணம் வழியாக புதுச்சேரி, கடலூா் செல்லும் பேருந்துக்கள்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்:
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி ,திருப்பதி செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்:
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம். வேளாங்கண்ணி திருச்சி. மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி. காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு)
Tags: தமிழக செய்திகள்