Breaking News

இன்ஜினியர் வேலைக்கு சவுதிஅரேபியா செல்பவர்களுக்கு -அங்கீகாரம் சான்றிதழ் கட்டாயம் professional accreditation engineers employment saudi arabia

அட்மின் மீடியா
0

 சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பொறியாளர்கள் அந்த நாட்டின் சவுதி பொறியாளர்கள் குழுமத்தில் கட்டாய தொழில் முறை அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். முறையான அங்கீகாரம் பெறாதவர்கள் பொறியாளர்களாக பணிபுரிய அனுமதி வழங்கப்படாது என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. 

இத்தகவல் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ளது.எனவே, சவுதியில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள், தற்போது பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க:-

https://www.aicte-india.org/content/professional-accreditation-engineers-employment-saudi-arabia


MANDATORY PROFESSIONAL ACCREDITATION

professional accreditation engineers employment saudi arabia

Get professional accreditation to work in Saudi Arabia AICTE tells engineers

Get professional accreditation to work in Saudi Arabia

AICTE tells engineers

www.aicte-india.org

aicte

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback