Breaking News

பழனி டூ கொடைக்கானல் ரோப்கார் சேவை விரைவில்.....palani to kodaikanal rope car

அட்மின் மீடியா
0

 பழனி - கொடைக்கானல் இடையிலான ரோப் கார் திட்டத்திற்கு ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோவில், மற்றும் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளது. இதில், திருவிழா காலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் இதேபோல் சீசன் காலத்தில்  சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். 

சுற்றுலா பயணிகள், 64 கிலோமீட்டர் தூரம் கொண்ட பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த மலைப்பாதையில் செல்ல சுமார் 3 மணி நேரம் ஆகும்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 18 இடங்களில் ரோப் கார் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதில் பழனி - கொடைக்கானல் மலைகளுக்கு இடையே ரோப் கார் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.தமிழகத்தில் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப் பகுதி வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த ரோப் கார் திட்டம் அமையும்  இந்த கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் ரோப் கார் சேவை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர்.

அதற்காக ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பர்நாடு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புலியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் பழனி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை அந்த குழுவினர் பார்வையிட்டனர்.தொடர்ந்து கொடைக்கானல் மலைகள், குரூப் கார் ஸ்டேஷன் அமையும் இடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தக் குழுவினருடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கரசுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரோப் கார் அமைக்கும் திட்டம் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளனர். 

கொடைக்கானலில் 18-லிருந்து 24 மாதங்களுக்குள் ரோப் கார் அமைக்கும்பணி நிறைவடையும், 1 மணி நேரத்தில் 100 முதல் 1000 பயணிகள் ரோப் காரில் பயணிக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பொறியாளர் மார்கஸ் தெரிவித்தார்.

மலைப் பகுதிகளில் ரோப் கார் சேவையை தொடங்குவதால், அந்தந்த மாநிலங்களின் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Give Us Your Feedback