இந்தோனேசிய பள்ளிவாசலில் ஏற்பட்ட தீ விபத்து குவி மாடம் இடிந்து விழும் வீடியோ jakarta grand mosque dome collapses after fire accident
இந்தோனேசிய
தலைநகர் ஜகார்த்தாவில் இஸ்லாமிய மையப் பெரிய மசூதியில்
தீப்பிடித்ததால் பள்ளிவாசல் மேல் உள்ள ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்தது.
தீவிபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம்
ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இஸ்லாமிய மையப் பெரிய மசூதியில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றது இந்நிலையில் நேற்று 19.10.2022 மதியம் சுமார் 3.30 மணியளவில் திடிரென தீ விவத்து ஏற்பட்டுள்ளது .தீ வேகமாக பரவி முழுவதுமாக பள்ளி எரிய தொடங்கியுள்ளது. உஅடனடியாக தீயனைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்துள்ளார்கள்
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மசூதியைத் தவிர, இஸ்லாமிய மைய வளாகத்தில் கல்வி, வணிக மற்றும் ஆராய்ச்சி வசதிகளும் உள்ளன. இந்த தீ விபத்தில் பள்ளிவாசலின் குவிமாடம் கீழே விழுந்து நொறுங்கியது கீழே விழுமுன் கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகள் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/vani_mehrotra/status/1582922308829597697
https://twitter.com/theinformantofc/status/1582767560444899328
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ