Breaking News

ஹிஜாப் தடை செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என ஒரு நீதிபதி வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு hijab ban supreme court

அட்மின் மீடியா
0

ஹிஜாப் விவகாரத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருவேறு தீர்ப்புகள் வந்ததால் வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்விற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி ஹேமந்த் குப்தாவும் கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்கிறேன் என நீதிபதி சுதான்ஷு துலியாவும் தீர்ப்பு வழங்கினார்கள் இதனால் சரியான வழிகாட்டுதலுக்காக வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி ஹிஜாப் அணிந்துவந்த  மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைகளுக்குள் அனுமதித்தால், நாங்களும் காவித்துணி அணிந்து வருவோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹிஜாப் தடைக்கு எதிராக கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர் அதில்
கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிற்கு எதிரான தொட்ப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல, சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியிருந்தது. 
 
அந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பிலும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் 24 மனுக்கள் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் விசாரக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் , இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதில்
 
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி ஹேமந்த் குப்தாவும் கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்கிறேன் என நீதிபதி சுதான்ஷு துலியாவும் தீர்ப்பு வழங்கினார்கள் இதனால் சரியான வழிகாட்டுதலுக்காக வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback