Breaking News

FACT CHECK குண்டூரில் நாக தெய்வம் கோவிலை இஸ்லாமியர்கள் இடித்ததாகப் பரவும் வீடியோ உண்மை என்ன! Rumored video of Muslims demolishing Naga Deivam temple in Guntur

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  குண்டூரில் நடந்தது.😱 நாளை உங்கள் ஊரில். . . இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாகவோ மாறும் அபாயம்…இந்த காணொளி எதிர்காலத்தில் நமது நிலையை காட்டுகிறது…. . இந்த வீடியோவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நாக தெய்வம் கோவிலை வழக்கமாக வழிபடும் ஒரு குடும்பத்தின் கதறல் தான் இந்த வீடியோ. உண்மையைக் காட்டுவது தவறல்ல, உண்மையிலிருந்து தப்பிப்பது தவறு. மேலும், உண்மையைக் காட்டுவது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல…. உண்மையைக் காட்டுவதற்குக் காரணம், எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்…” என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் சில இஸ்லாமிய ஆண்கள் ஒரு முகப்பு தோற்றத்தை இடிக்கின்றார்கள் அந்த முகப்பின் மேல் நாகம் போன்ற ஒரு சிலை உள்ளது சில பெண்கள் அங்கு தெலுங்கில் கத்துகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

குண்டூரில் நடந்தது.😱 நாளை உங்கள் ஊரில். . . இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாகவோ மாறும் அபாயம்…இந்த காணொளி எதிர்காலத்தில் நமது நிலையை காட்டுகிறது…. . இந்த வீடியோவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நாக தெய்வம் கோவிலை வழக்கமாக வழிபடும் ஒரு குடும்பத்தின் கதறல் தான் இந்த வீடியோ. உண்மையைக் காட்டுவது தவறல்ல, உண்மையிலிருந்து தப்பிப்பது தவறு. மேலும், உண்மையைக் காட்டுவது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல…. உண்மையைக் காட்டுவதற்குக் காரணம், எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்…” என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் சில இஸ்லாமிய ஆண்கள் ஒரு முகப்பு தோற்றத்தை இடிக்கின்றார்கள் அந்த முகப்பின் மேல் நாகம் போன்ற ஒரு சிலை உள்ளது சில பெண்கள் அங்கு தெலுங்கில் கத்துகின்றார்கள்

வீடியோவில் உள்ள சந்தேகங்கள்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவை நன்கு உற்று கவனித்தால் உங்களுக்கு தெரியும் அந்த முகப்பின் மேல் உள்ள நாக சிலைக்கு பக்கத்தில் பிறை உள்ள குறியீடு உள்ளது

மேலும் பொதுவாக தர்காக்களில் பச்சை கலர் பெயிண்ட் தான் பூசுவார்கள் ஆகையால் அது தர்காவாக இருக்கோ என சந்தேகம் எழுந்தது

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைப்படமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது தான் மேலும் அங்கு இடிக்கப்படுவது பலரும் நினைப்பது போல் அது இந்துக்கள் கோவில் இல்லை, மாறாக அது இஸ்லாமியர்களின் தர்கா ஆகும் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


வைரலான வீடியோவில் இருக்கும் தர்கா பெயர் பாஜி பாஷா நிஷானி தர்கா ஆகும்

இந்த தர்கா ரத்னம் என்கிற ரஹ்மான் என்பவரால் கட்டப்பட்டது. இவர் 15 வருடங்களுக்கு முன்பு மறைந்த தன் மனைவி நாக ரத்தினம் நினைவாக அந்த இடத்தில் ஒரு நினைவிடம் கட்டியுள்ளார். அவரின் நினைவாக தான் பாம்பின் சிலை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தர்காவை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அந்த பகுதியைச் சார்ந்த அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்து வந்துள்ளனர்

இந்நிலையில் ரஹ்மான்  தான் இறந்த பிறகு அந்த இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என தன் மகள் மற்றும் சுற்றி இருந்தவர்களிடம் கூறியுள்ளார். கடந்த 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டு ரஹ்மான் இறந்துவிட்டார். 

அவருடைய மகள் அந்த இடத்தில் மசூதி கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.அப்போது அந்த தர்காவை இடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோதான் அது

மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் சுனில் தியோடர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறிய தர்காவை இடித்துவிட்டு பெரிய மசூதியை கட்ட முயற்சி செய்கிறார்கள். இதனை ஆந்திர பாஜக அனுமதிக்காது” என  வைரலான வீடியோ குறித்து பதிவிட்டுள்ளார்

முடிவு:-

ஆந்திரா மாநிலம் குண்டூரில் இந்துக்களின் கோவிலை இடிக்கும் இஸ்லாமியர்கள் என பரவும் பொய்யான வீடியோவை யாரும் நம்பாதீர்கள்

பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

ஆதாரம் 1


ஆதாரம் 2

https://twitter.com/satyakumar_y/status/1580834205172654080

https://zeenews.india.com/video/india/guntur-attempt-to-demolish-the-dargah-2522740.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback