Breaking News

FACT CHECK கூகுள்பே, போன்பேவில் 51 வது பரிவர்த்தனைக்கு மேல் 590 கட்டணம் என பரவும் செய்தி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கூகுள் பே, போன்பே மூலம் 3 மாதங்களுக்கு 50 பரிவர்த்தனைதான் செய்யமுடியும் அதர்க்கு மேல் ரூ 590 கட்டணம் பிடிக்கின்றார்கள் என்று  ஒரு ஆடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?



முழு விவரம்:-

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கூகுள் பே, போன்பே மூலம் 3 மாதங்களுக்கு 50 பரிவர்த்தனைதான் செய்யமுடியும் அதர்க்கு மேல் ரூ 590 கட்டணம் பிடிக்கின்றார்கள் என்று  ஒரு ஆடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள் ஆனால் அந்த தகவல் உண்மையில்லை


UPI பண பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில், அதுபோன்று எவ்வித கட்டணமும் வசூலிக்கும் பரிசீலனை மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. 

டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை  இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கம்தான் UPI, தற்போது  UPI பரிவர்த்தனைகளுக்கு பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  யுபிஐ நிதிப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சகம் தன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது

அதில் UPI பண பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில், அதுபோன்று எவ்வித கட்டணமும் வசூலிக்கும் பரிசீலனை மத்திய அரசிடம் இல்லை என்றும் யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback