Breaking News

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக மலேசிய பிரதமர் அறிவிப்பு விரைவில் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா ஒப்புதலுடன் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய பிரதமர். 

சற்று முன்னர் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், நேற்று (9 அக்டோபர்) மாமன்னரைச் சந்தித்தபோது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றதாகச் பிரதமர் கூறினார்

மேலும் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதியை மலேசியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று திரு. இஸ்மாயில் கூறினார்.சாபா, சரவாக், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்த மற்ற மாநிலங்களின் சட்டமன்றங்களும் இன்றே கலைக்கப்படுவதற்கு அவர் பரிந்துரைத்தார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் கூட இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மலேசியாநாடாளுமன்றம் ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு. வழக்கமாக பொதுத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.அதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று நாட்டின் பிரதமர் முடிவெடுத்தால் அவ்வாறு செயலாம்.நாடாளுமன்றக் கீழவையில் மொத்தமுள்ள 222 இடங்களில் 112 அல்லது அதற்கும் அதிகமானவற்றைக் கைப்பற்றும் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.பொதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி இம்முறை மலேசியாவில் பொதுத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்குள் நடைபெற்றாக வேண்டும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback