இனி ஹலோ சொல்லக்கூடாது வந்தே மாதரம் என கூறவேண்டும் -அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!
தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதில் வந்தே மாதரம் என கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள், அரசு உதவி பெரும் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் எனக்கூறி வணக்கம் செலுத்த வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
சிவசேனா கட்சியை சேர்ந்த 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவினர் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.இதில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரானார்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன். தொலைபேசியில் பேசும்போது ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் ‛வந்தே மாதரம்' எனக்கூறியே வணக்கம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இதற்கான சுற்றறிக்கையை, மாநில பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது
இந்த வந்தேமாதரம் பிரச்சாரம் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சுதிர் முங்கதிவார் ஆகியோர் இன்று காலை வார்தாவில் வந்தேமாதரம் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர்
Tags: தமிழக செய்திகள்