Breaking News

புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது மின்தடையால் மக்கள் அவதி

அட்மின் மீடியா
0
மின்துறை தனியார் மயத்தை கண்டித்து தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், புதுச்சேரி முழுவதும் மின்விநியோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


மின்துறை தனியார் மயத்தை கண்டித்து தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அரசு இதுவரை மின் துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மின் துறையினரின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மின்விநியோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின்வெட்டை தொடர்ந்து தலைமை செயலர், டிஜிபி மின்துறை செயலர் ஆகியோருடன் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை மேற்கொண்டார். 

அதன் பின் புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். விரைந்து மின் விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் தற்போது உள்ள நிலைமை சமாளிக்க மத்திய அரசு பவர் கிரிட் நிறுவனத்திலிருந்து 24 ஊழியர்களை அனுப்பியுள்ளது. மின் நிலையங்களுக்கு பாதுகாப்பளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனி படையினரும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர்” எனக் கூறினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback