ஒருதலை காதலால் ரயில் முன் தள்ளப்பட்டு மாணவி படுகொலை குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார். மாணவி சத்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்
மாணவி சத்யா உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் மேலும் தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்