Breaking News

பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரை உதட்டில் கடித்த பாம்பு!!! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் ஷிவமோகா அருகே நல்ல பாம்பைப் பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை வாயில், கடித்த பாம்புமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அந்த இளைஞர் நலமுடன் உள்ளார்

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவின் அருகில் உள்ள பத்திராவதி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ரோனி ஆகியோர் பாம்புகளை பிடித்து காட்டில் விடும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.  

பத்திராவதி  குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. உடனே பாம்பு பிடிக்கும் நபர் அலெக்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அலெக்ஸ் மற்றும் ரோனியும் அந்த பாம்பை பிடித்துள்ளனர். அப்பொழுது அலெக்ஸ் நாகப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அலெக்ஸ் வாயில் கொத்தியுள்ளது. பின்னர் அந்த பாம்பை பிடித்த ரோனி அதனை காட்டில் விட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அலெக்ஸ் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=jUsQdQD_GmM

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback