குஜராத்தில் திடீரென்று அறுந்து விழுந்த கேபிள் பாலம்.. 60 பேர் பலி உயிருக்கும் போராடும் 100 பேர் வீடியோ Cable bridge on Machchhu river collapsed
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் பாலம் உள்ளது பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 26 ம்தேதி குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கேபிள் பாலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இருக்கும் போது திடீரென்று பாரம் தாங்காமல் கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக வந்த மக்கள் மற்றும் போலீசார் தீயனைப்பு வீரர்கள் என அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளார்கள், மேலும் 100 பேர் வரை இன்னும் பால இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TimesNow/status/1586758601687072769
https://twitter.com/ndtv/status/1586748185351196672
https://twitter.com/TimesNow/status/1586747097633939457
gujarat bridge collapse
கேபிள் பாலம்
குஜராத்
Machchhu River
Cable bridge on Machchhu river collapsed
machchhu river cable bridge
machhu river
गुजरात के मोरबी में बड़ा हादसा, केबल पुल टूटने से कई लोग नदी में गिरे, अब तक 60 लोगों की मौत
Tags: இந்திய செய்திகள்