Breaking News

தமிழகத்தில் இனி ரேசன்கடைகளில் 5 கிலோ சிலிண்டர் வாங்கி கொள்ளலாம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் அக்டோபர் 6 முதல் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

                                              

மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை நேற்று கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும் அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் அரிசியை வாங்கிக் கொள்ளலாம் அரிசி வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தவோ குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தவோ கூடாது என கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback